Alphabetical List

H
Englishதமிழ்
Hackers கணினி ஊடுருவிகள் / கணினியைக் கையாளும் திறன் வாய்ந்தவர்
Haemorrhage இரத்தக்கசிவு
Half-time இடைவேளை (விளையாட்டு)
Halfway house இடைநிலை மறுவாழ்வு இல்லம்
Hallmark event முத்திரை பதிக்கும் நிகழ்ச்சி / சிறப்புவாய்ந்த நிகழ்ச்சி
Hammer throw சம்மட்டி எறிதல்
Handicraft centre கைவினைப் பொருள் நிலையம்
Handloom கைத்தறி
Handover of power அதிகாரத்தை ஒப்படைத்தல்
Harmony circles நல்லிணக்கக் குழுக்கள்
Harsh penalty கடுந்தண்டனை
Hawker centre உணவு அங்காடி நிலையம்
Hawkish (political stance) கடும் போக்குடைய (அரசியல் நிலைப்பாடு)
Haze புகைமூட்டம் / தூசுமூட்டம்
Headscarf தலையங்கி
Healing force குணப்படுத்தும் சக்தி / நோய் போக்கும் சக்தி
Healthcare cost சுகாதாரப் பராமரிப்புச் செலவு
Healthcare worker சுகாதாரத்துறை ஊழியர் / உடல்நலத்துறை ஊழியர்
Health declaration form உடல்நலச் சாற்றுரைப் படிவம் / சுகாதார விவர அறிவிப்புப் படிவம்
Health promotion board சுகாதார மேம்பாட்டுக் கழகம்
Health sciences authority சுகாதார அறிவியல் ஆணையம்
Heart attack மாரடைப்பு
Heartlander பொதுக் குடியிருப்புவாசி 
Heart palpitation சீரற்ற இதயத்துடிப்பு
Heatwave அனற்காற்று
Heavy downpour கனத்த மழை
Hefty compensation பெரும் இழப்பீடு
Hegemony மேலாதிக்க நிலை
Hepatitis கல்லீரல் அழற்சி
Heptathlon எழுவகை விளையாட்டுப் போட்டி
Heritage மரபுடைமை
Hermit state தனித்தியங்கும் நாடு
Heroin போதைமிகு அபின் / அபினிலிருந்து தயாரிக்கப்படும் மயக்க மருந்து
High court உயர் நீதிமன்றம்
High definition tv (hdtv) நுண்தெளிவுத் தொலைக்காட்சி
High-end condominiums உயர்விலை, உயர்தர கூட்டுரிமை வீடுகள்
Higher quantum கூடுதல் அளவு / தொகை
High jump உயரம் தாண்டுதல்
High-level contacts உயர்நிலைத் தொடர்புகள்
High-level meeting உயர்நிலைக் கூட்டம்
High profile trial பலருடைய கவனத்தையும் ஈர்க்கும் வழக்கு
High-security zone உயர் பாதுகாப்பு வட்டாரம்
High-tech township உயர் தொழில்நுட்ப நகரம்
Hijack கடத்தல்
Historical background வரலாற்றுப் பின்னணி
Historical circumstances வரலாற்றுச் சூழ்நிலைகள்
Historical reasons வரலாற்றுக் காரணங்கள்
Historic sites வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இடங்கள்
Holiday mood விடுமுறைக்கால மனநிலை
Holistic education முழுமையான கல்வி
Homegrown terrorists உள்நாட்டுப் பயங்கரவாதிகள்
Homemade explosive நாட்டு வெடிகுண்டு
Home nursing foundation இல்லத் தாதிமை அறநிறுவனம்
Home quarantine order (hqo) இல்லத் தனிமை உத்தரவு
Home science மனையியல்
Hometown சொந்த ஊர் / பிறந்த ஊர்
Homosexuals ஓரினப் புணர்ச்சியாளர்கள்
Honorary consul கௌரவத் தூதர்
Hooliganism போக்கிரித்தனம்
Hormone சுரப்பிநீர்
Horsepower ஆற்றல் அளவுக்கூறு (இயந்திரம்); அளவை அலகு
Horticulture தோட்டக்கலை
Hospice அந்திமகால இல்லம்
Hospitality industry விருந்தோம்பல் தொழில்துறை
Hostage பிணையாளி / பிணையாள்
Host country நிகழ்ச்சியை ஏற்று நடத்தும் நாடு
Hostel fee விடுதிக் கட்டணம்
Hostility பகைமை
Hotline அவசரத் தொலைபேசி எண்
House arrest வீட்டுக் காவல்
Housebreaking கன்னக்களவு / வீடு புகுந்து கொள்ளையடித்தல்
Household expenditure குடித்தன / குடும்பச் செலவினம்
House of representatives (usa) அமெரிக்க மக்களவை
House union பணிமனைத் தொழிற்சங்கம்
Housing and development board (hdb) வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீ.வ.க.)
Housing grant வீட்டு மானியம்
Hub of militant activity தீவிரவாத நடவடிக்கையின் மையம்
Human genome மனித மரபணுத் தொகுப்பு
Human organ transplant act (hota) மனித உறுப்பு மாற்றுச் சட்டம்
Human resource மனிதவளம்
Human rights  மனித உரிமைகள்
Human rights groups மனித உரிமைக் குழுக்கள்
Human shields மனிதக் கேடயங்கள்
Human trafficking ஆள் கடத்தல்
Humiliating defeat படுதோல்வி / வெட்கித் தலைகுனியத்தக்க தோல்வி
Hung parliament தொங்கு நாடாளுமன்றம் (எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையில்லாத நாடாளுமன்றம்)
Hurdles (athletics) தடையோட்டம்
Hybrid vehicle இரட்டை எரிசக்தி வாகனம்
Hydraulic machine நீரழுத்த இயந்திரம்
Hypermart மாபெரும் அங்காடி
Hypocrisy பாசாங்கு / கபடம் / வெளிவேடம் / போலி வேடம்
Hypothesis உத்தேசக் கருத்து / கருதுகோள் / ஆராய்ச்சிக்கு அடிப்படையாகக்கொள்ளும் கருத்து
Back To Top