சிங்கப்பூரில் தமிழ் மொழியின் பயன்பாட்டை வளர்க்க உதவும் உருவச்சின்னத்திற்கான வடிவமைப்பைச் சமர்ப்பிக்க வளர்தமிழ் இயக்கம் உங்களை அழைக்கிறது.
உருவச்சின்னம் வடிவமைக்கும் போட்டி
தமிழ் மொழி விழாவுக்கு உருவச்சின்னம் வடிவமைக்கும் போட்டிக்கு இப்போதிலிருந்து 13 ஜனவரி 2023 வரை வடிவமைப்புகளைச் சமர்ப்பிக்கலாம்.
சிங்கப்பூரில் தமிழ் மொழியைப் பிரதிநிதிக்கவும், தமிழ் மொழியின் பயன்பாட்டை வளர்க்கவும் பொருத்தமானதென நீங்கள் நினைக்கும் வடிவமைப்பை மின்னிலக்க முறையில் அல்லது கையால் வரையுங்கள்.
நீங்கள் வடிவமைக்கும் உருவச்சின்னத்திற்கு ஒரு பெயரைப் பரிந்துரைப்பதோடு, வடிவமைப்பைப் பற்றி 50 சொற்களுக்குள் விளக்கக்குறிப்பும் எழுதி இணைக்கத் தவறாதீர்கள்.
பரிந்துரைக்கப்படும் உருவச்சின்னத்தில் சமயம் சார்ந்த அம்சங்கள் எதுவும் இருக்கக்கூடாது. தமிழ் மொழி, கலாசாரம், மரபுடைமை ஆகியவற்றை வளர்ப்பதே உருவச்சின்னத்தின் நோக்கமாக இருக்கும். சொந்தமாக வடிவமைக்கப்பட்ட வடிவமைப்புகள் மட்டுமே ஏற்கப்படும்.
வடிவமைப்பை இங்கே சமர்ப்பிக்கலாம்!
மதிப்பீட்டின் தகுதிவிதிகள்
நீதிபதிகள் வழங்கும் மதிப்பெண்கள், பொதுமக்களின் வாக்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைப்புகள் மதிப்பிடப்படும்.
- நீதிபதிகள் (60%)
- பொதுமக்கள் வாக்களிப்பு (40%)
சமர்ப்பிக்கப்படும் வடிவமைப்புகள் பின்வரும் தகுதிவிதிகளின் அடிப்படையில் மதிப்பிடப்படும்:
- தமிழ் மொழி விழாவுக்கும் சிங்கப்பூரின் தமிழ் மொழிக்கும் பொருத்தமானது
- சொந்த வடிவமைப்பு & புத்தாக்கம்
- வடிவமைப்பைப் பற்றி தெளிவான விளக்கம்
வாக்களிப்பு இணைப்பை வளர்தமிழ் இயக்கம் வழங்கும். ஒரு வடிவமைப்பு மட்டுமே வெற்றிபெறும் வடிவமைப்பாகத் தேர்ந்தெடுக்கப்படும்.
முக்கிய தேதிகள்
வடிவமைப்பு சமர்ப்பிப்பு
|
14 டிசம்பர் 2022 – 13 ஜனவரி 2023
|
பொதுமக்கள் வாக்களிப்பு
|
23 ஜனவரி 2023 – 30 ஜனவரி 2023
|
வெற்றியாளர் அறிவிப்பு
|
6 பிப்ரவரி 2023
|
வடிவமைப்பைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் 13 ஜனவரி 2023 என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். இந்தத் தேதி நீட்டிக்கப்படாது.
விதிமுறைகளும் நிபந்தனைகளும்
அனைத்து முடிவுகளும் இறுதியானவை. வளர்தமிழ் இயக்கத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டவை. நீதிபதிகளின் முடிவே இறுதியானதாக இருக்கும்.
உங்களது வடிவமைப்பைச் சமர்ப்பிக்கும்போது, அது வெற்றிபெறும் வடிவமைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், வளர்தமிழ் இயக்கம் அந்த வடிவமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு நீங்கள் சம்மதம் தருகிறீர்கள்.