தமிழ் மொழி விழா 2025

 

இவ்வாண்டின் தமிழ்மொழி விழா ஏப்ரல் 5 முதல் மே 4 வரை நடைபெறவுள்ளது. சிங்கப்பூரில் தமிழ் மொழியைக் கொண்டாடவும் அதன் புழக்கத்தை ஊக்குவிக்கவும்  47 பங்காளிகளின் 46 நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

“இளமை” என்ற கருப்பொருளை மையமாகக்கொண்டே இந்த ஆண்டு நிகழ்ச்சிகள் அமையவுள்ளன.  அனைத்து வயதுடையோரும் நம் தாய்மொழியின் வேர்களைப் போற்றுவதோடு, தொடர்ந்து முன்னேற்றம் அடைவதற்கு மேலும் புதிய தளங்களை ஆராய அது ஊக்குவிக்கிறது.  இளமை என்பது வயதை சார்ந்து மட்டும் இல்லாமல், படைப்பாற்றல், புத்தாக்கம், சமூகம் ஆகியவற்றின் நீடித்த உணர்வை பிரதிபலிக்கிறது. இந்த உணர்வே சிங்கப்பூரின் பன்முக கலாச்சார சூழலில், தமிழ்மொழியை ஒரு முக்கிய அங்கமாக, தொடர்ந்து பல தலைமுறைகளுக்குச் செழிக்கச் செய்யும்.  அதோடு, SG60யை முன்னிட்டு, நம் நாட்டின் வளர்ச்சி மற்றும் மீள்திறன் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

தமிழ்மொழி விழா 2025ன் முக்கிய காட்சி முத்திரை பிரகாசமான வண்ணங்கள் மற்றும் இந்திய வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது. இந்த அம்சங்கள் கலாசார மரபுடைமையில் நமது தாய்மொழியின் ஆழமான வேர்களைப் பிரதிபலிக்கின்றன. அதோடு, தமிழ்மொழியின் துடிப்பு, மாற்றியமைத்துக்கொள்ளும் தன்மை, இன்றைய காலகட்டத்தோடும் இளையர்களோடும் ஒன்றி இருப்பதை பிரதிபலிக்கிறது.

மேலும், தமிழ்மொழியை சமூகங்களை இணைக்கும் பாலமாகவும் அறிவையும் கலைத்திறனையும் பாதுகாக்கும் செம்மொழியாகவும் சித்திரிப்பதோடு தமிழ் கலாசாரத்தின் அடையாளத்தையும் வடிவமைக்கின்றன.

மேலும் தகவலுக்கு, இந்த இணைப்பை பார்க்கவும்.

Back To Top