தீவு முழுவதும் தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்! தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்
இவ்வாண்டின் தமிழ்மொழி விழா ஏப்ரல் 5 முதல் மே 4 வரை நடைபெறவுள்ளது. சிங்கப்பூரில் தமிழ் மொழியைக் கொண்டாடவும் அதன் புழக்கத்தை ஊக்குவிக்கவும் 47 பங்காளிகளின் 46 நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
நிகழ்ச்சி நிரல்
சிங்கப்பூரில் தமிழ்மொழியை வாழும் மொழியாகவும் பயன்பாட்டு மொழியாகவும் நிலைபெறச் செய்வதோடு, அனைத்து வயதினரையும் தமிழால் ஒன்றிணைத்து, சிங்கப்பூரில் தமிழ்மொழியை ஓங்கச் செய்வதே வளர்தமிழ் இயக்கத்தின் தலையாய நோக்கமாகும்.