08 September 2024
மதியம் 4.30 - மாலை 6.30
ஆற்றல்மிகு பேச்சுடன் அழகு நடையை ஒருங்கிணைப்பது கலிங்கம் நிகழ்ச்சியின் நோக்கமாகும். இது சங்க இலக்கியத்தில் வர்ணிக்கப்படும் ஆடை ஆபரணங்களைப்பற்றி இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த முற்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் இளையர்கள், இருவர் கொண்ட குழுவாக இணைந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். அவர்கள், சங்க இலக்கியத்தை நினைவூட்டும் ஆடைகளை வடிவமைத்து அவற்றை அழகு நடையில் காட்சிப்படுத்தலாம். சங்க இலக்கியக் கதாபாத்திரங்களையும் அப்பாத்திரங்களின் வரலாற்றுப் பின்னணிகளையும் ஆராய்வதற்கான வாய்ப்பும் பங்கேற்பாளர்களுக்குக் கிடைக்கும். பங்கேற்பாளர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை வரலாற்றுச் சான்றுகளை மேற்கோள்காட்டிப் படைத்து, அக்கால வரலாற்றையும் இக்காலக் கண்ணோட்டங்களையும் பார்வையாளர்களுக்கு வழங்குவார்கள்.
இலவசம் - பதிவு செய்ய: https://shorturl.at/gKyrH