யுத்தம்

2022-TLF---NUS-TLS---Yutham

02 April 2022
காலை 9 - மதியம் 1, மதியம் 3 - மாலை 6


யுத்தத்தில் சுவாரசியமான நான்கு வெவ்வேறு சுற்றுகள் உள்ளன. மாணவர்கள் தங்களது பள்ளிகளைப் (உயர்நிலை / புகுமுக வகுப்பு) பிரதிநிதித்து ஒவ்வொரு சுற்றிலும் புள்ளிகளைச் சேகரிப்பார்கள். தினசரி வாழ்க்கையில் மாணவர்களின் தமிழ்மொழி பயன்பாட்டை மேம்படுத்துவதும், மாணவர்களிடையே தமிழ் திரைப்பட உலகில் தமிழ்மொழியின் தாக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே யுத்தத்தின் நோக்கமாகும். யுத்தம் 2022 தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் பயன்பாடு மற்றும் பாராட்டுதலை ஊக்குவிக்கவும் முயற்சிக்கிறது.

அதே நேரத்தில், யுத்தம் ஒவ்வொரு சுற்றிலும் போட்டியாளர்களை நீக்காமல், பங்கேற்பாளர்களிடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்க விரும்புகிறது. குழு முயற்சியை ஊக்குவிப்பதன் ஒரு பகுதியாக, பாதிக்கும் மேற்பட்ட சுற்றுகள் குழுவில் உள்ள இருவரும் ஒன்றிணைந்து விளையாடும் சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. தமிழில் உரையாடி அவர்கள் பதில்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் வேகத்துடனும் விவேகத்துடனும் யோசித்து பதில்களைச் சொல்ல நாங்கள் ஊக்குவிக்கிறோம். மேலும், தமிழ்ப் பாடல்களின் இலக்கிய நயத்தை பாராட்டவும் மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள். தமிழ் மொழியை தெளிவாக உச்சரித்து பேச ஊக்குவிக்கிறோம். இந்நிகழ்ச்சியில் மொழி ஆற்றலை வளர்க்கவும் தமிழ் மொழியில் தன்னம்பிக்கையுடன் பேசவும் வழிவகுக்கப்படும். தமிழ் மொழியில் இருக்கும் சுவாரசியமான அம்சங்களை அறிமுகம் செய்து, மொழிப் பற்றை வளர்க்க முனைகிறோம்.
Back To Top