உ வே சா நினைவு சொற்பொழிவு " தமிழ் தாத்தா " திரு சொ சொ மீ சுந்தரம்

2017-TLF---U-Ve-Sa-Memorial-Lecture

28 April 2017
மாலை 7 முதல் 9 வரை


தமிழ்மொழிக்கு உ.வே.சா  என்று அன்போடு அழைக்கப்படும் திரு உ வே சாமிநாத அய்யரின் பங்களிப்பு மிகவும் மகத்தானது. மிகக் குறைந்த வசதிகளுடனும் கடின உழைப்புடனும் அவரது விடா முயற்சியாலும் மறைந்து கிடந்த பழந்தமிழ் அரிய நூல்கள் நமக்கு இன்று கிடைத்துள்ளன. தனி ஒருவராய் அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்நாட்டின் மூளை முடுக்கெல்லாம் சென்று அவர் திரட்டிய ஓலைச்சுவடிகள் ஏராளம். அவற்றைப் பொறுமையாய் படித்து, ஒப்பிட்டு, பிழை திருத்தி அவர் வெளியிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களால் தமிழ்மொழிக்கு இன்றளவும் பெருமையும் சிறப்பும் நிலவுகின்றது. 

பல பட்டங்களும் விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டாலும் அவரை அடையாளம் காட்டுவது தமிழ் தாத்தா என்ற அடைமொழியே! அவர் 28 ஏப்ரல் 1942 அன்று மறைந்தார். அவரது நினைவுநாளான்று, அவரைப் போற்றியும் அவரது தமிழ்த்தொண்டினைப் பாராட்டியும், சிங்கப்பூர் தென்னிந்திய அந்தணர் கழகம் , ‘உ.வே.சா. நினைவுச் சொற்பொழிவை’ நடத்தவுள்ளது. இதில் தமிழறிஞர், பேராசிரியர் சொ.சொ.மீனாட்சிசுந்தரம் அவர்கள் உரையாற்றவுள்ளார்.
Back To Top