23 April 2017
மாலை 6 - இரவு 9
இவ்வாண்டின் தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக, தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காகப் பேச்சுப் போட்டி , மார்ச் மாதம் நடத்தப்பட்டு, வெற்றிப் பெற்ற மாணவர்களுக்குஇந்த நிகழ்ச்சியின்போது பரிசு வழங்கப்படும்.
மேலும், நிகழ்ச்சிக்குக் கூடுதல் சுவை அளிக்க, பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி.பாரதி பாஸ்கர், எவ்வாறு இளைய தலைமுறையினர் தமிழை இலகுவாகவும் இனிமையாகவும் கற்றுக்கொள்ள முடியும் என்பது பற்றித் தமது கருத்துகளை முன்வைப்பார். மேலும் சிறப்புப் பேச்சாளருடன் மாணவர்களும் விருந்தினர்களும் கலந்துரையாடும் அங்கமும் உண்டு.