உயிர் உள்ளுணர்வு மற்றும் கடந்த நூற்றாண்டில் தமிழ்மொழி வரலாறு

2017-TLF---Survival-Instinct-and-Evolution-of-Tamil-Language

15 April 2017
மதியம் 3 - 5


புகழ்பெற்ற ‘TED-Talk’ பாணியில் அமையவிருக்கின்ற இந்நிகழ்ச்சியில் இருவழிக் கலந்துரையாடலோடு நமது சிந்தையைக் கவரும் பல்வேறு கோணங்களில் கருத்துக்களம் அமைய ஏற்பாட்டாளர்கள் முயற்சி செய்ய இருக்கின்றனர். குறிப்பாக, தமிழ்மொழி, காலவோட்டத்தில் அடைந்து வந்துள்ள பரிணாம வளர்ச்சி, மொழி சார்ந்த சூழலின் மாற்றங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் மொழி சார்ந்த தன்மைகள் குறித்துப் பேச்சாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளனர்.

திராவிட மொழிகளுள் ஒன்றாகிய தமிழ்மொழி, பல்வேறு பூலோக, கலாச்சார மற்றும் சமய மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகளைத் தாண்டி, செவ்வியல் மொழியாக இன்று அங்கீகாரம் கண்டு, இன்னும் தொடர்ந்து வளர்ந்து வருவது மிகப் பெரிய சிறப்பாகும். இந்த நிகழ்ச்சியின் மூலம் மொழியின் வளர்ச்சி, மொழியைப் பயன்படுத்துபவர்களின் தன்மைக்கு ஏற்ற நெகிழ்வுத்தன்மை  மற்றும் மற்ற மொழிகளோடு இணைந்து செயல்படும் தன்மை என்பன போன்ற சுவாரசியமான நிலைகளைக் கண்டறியும் விதமாக நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம்- தமிழ் ஆகிய இருமொழிகளிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். இளையர்களால் முழுக்க முழுக்க இந்த நிகழ்ச்சி வழிநடத்தப்படும். புத்தாக்கமாக, தமிழ் பேசாதவர்கள் மத்தியில் தமிழ்மொழியின் சிறப்பைப் பறைசாற்றுவதோடு, தமிழில் பேசவும் தமிழைப் பயன்படுத்தவும் சிரமப்படும் இளையர்களை மொழியின்பால் ஈர்ப்பதும் இந்த நிகழ்ச்சியின் முக்கியக் குறிக்கோளாக உள்ளது. 

 
Back To Top