23 April 2017
மதியம் 5 - மாலை 7.30
2009இல் தொடக்கம் கண்ட இந்த விவாதப்போட்டி, 5வது ஆண்டாக, இம்முறை தமிழ்மொழி விழாவில் இடம்பெறவுள்ளது. 32 தொடக்கப்பள்ளிகள் இந்த விவாதப்போட்டியில் பங்கெடுக்கும்.
இரண்டு பகுதிகளாக நடைபெறும் இந்தவிவாதப்போட்டியில், முதல் அங்கமாகத் தயாரித்துப் பேசுதல் அங்கம் அமையும். இந்த அங்கத்திற்கான தலைப்பு ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு வாரங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டுவிடும். இரண்டாவது அங்கம் தயாரிப்பு இல்லாத அங்கமாகும். இந்த அங்கத்தில், பள்ளிகளுக்கான தலைப்பு, போட்டி நடைபெறும் அச்சமயத்தில் கொடுக்கப்பட்டு, தயாரிப்பிற்காக ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் அளிக்கப்படும்.
www.trc.org.sg/sorpor2017reservation