சிங்கப்பூர்த் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி

2017-TLF---Singapore-Tamil-Wikipedia-Competition

15 April 2017
காலை 9 - மதியம் 3


இணையத்தில் பல இணையத்தளங்கள் இருந்தாலும், விக்கிப்பீடியா போன்ற இணையத்தளங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகவும் இன்றியமையாததாகவும் மாணவர்களுக்கு அமைகின்றன. இந்த வீக்கிப்பீடியா இணையத்தளத்தின் தமிழ்ப் பதிப்பில், சிங்கப்பூர்த் தொடர்பான செய்திகள், கட்டுரைகள் மற்றும் தரவுகளைப் பதிவேற்றம் செய்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கான போட்டியாக நடத்தப்படும். இப்போட்டியின் மூலம் மாணவர்களிடத்தில் தமிழின்மீது தொடர்ந்து ஈர்ப்பும், தகவல்தொழில்நுட்பத்தில் கூடுதல் ஈடுபாடும் ஏற்பட வழிவகுக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.

இந்தப் போட்டி உயர்நிலை மற்றும் புகுமுக வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்காக நடத்தப்படுகின்றது. கலந்துகொள்ளும் மாணவர்கள் சிங்கப்பூர்த் தொடர்பான பொதுத் தகவல்களைக் கண்டறிந்து, அவற்றின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து, பதிவேற்றம் செய்யும் திறன்களைப் பெறுவார்கள்.

தலைசிறந்த படைப்புகள் தமிழ் விக்கிப்பீடியா இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதோடு, அவற்றை எழுதிய மாணவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் நோக்கில் பரிசுகளும் வழங்கப்படும்.

 
Back To Top