செம்மொழி சஞ்சிகை

2017-TLF---Semmozhi-Magazine

01 April 2017


‘செம்மொழி’ சஞ்சிகை ஆண்டிற்கு நான்கு முறை வெளிவரும் சிங்கப்பூர் படைப்பாகும். 1999இல் தமிழ்மொழியை வளர்க்கவும், மக்களிடையே மொழிப்பயன்பாட்டைப் பிரபலப்படுத்தவும் இந்தச் சஞ்சிகை தொடங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில், படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதோடு, உள்ளடக்கமும் மேம்பட்டுள்ளது. புதிய, இளைய எழுத்தாளர்களுக்குத் தளம் அமைத்துக்கொடுத்து, அவர்களுடைய எழுத்துப்பணித் தொய்வின்றி நடைபெற, ‘செம்மொழி’ சஞ்சிகை வழிவகுக்கின்றது. சிங்கப்பூரில்நடைபெற்றுவரும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் மொழி, பண்பாடு மற்றும் மரபு சார்ந்த அம்சங்களும் இச்சஞ்சிகையில் பிரதானமாக இடம்பெறுகின்றன.

செம்மொழி சஞ்சிகை இருநிலைகளில் வெளியீடு காண்கின்றது. சஞ்சிகையாகவும் மின்பதிப்பாகவும் வெளிவருகின்றது. மின்பதிப்பு, உலகத்திலுள்ள அனைத்துத் தமிழ் மக்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றது. ஒவ்வொரு பதிப்பும் 2,000 பிரிதிகள் அச்சிடப்பட்டு, வெவ்வேறு தமிழ் நிகழ்ச்சிகளின்போது பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்படுகின்றது. 

வழக்கம்போல, தமிழ்மொழி விழாவின் போது சிறப்பு மலர் வெளியிடப்படும். இதில் தமிழ்மொழி விழாவின் நோக்கங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் விழா அட்டவணை போன்ற மிக முக்கியமான தகவல்கள் பொது மக்களுக்காக வழங்கப்படும்.

 
Back To Top