16 April 2017
மாலை 6 - இரவு 8
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று தமிழ்மொழியில் பேசுவதையும் எழுதுவதையும் முன்னிறுத்துவதேயாகும். குறிப்பாக, மாணவர்கள் தமிழ்மொழி மற்றும் இலக்கியத்திற்கு ஆற்றும் பங்கைப் போற்றுவதாகும்.
நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, தமிழ்மொழி மற்றும் இலக்கியம் சார்ந்த தமது பார்வையைப் பேராசிரியர் முனைவர் மன்சூர் அவர்கள் ஓர் இலக்கியச் சொற்பொழிவாக நடத்த உள்ளார். முனைவர் மன்சூர், திருச்சி ஜமால் முகமது கல்லூரி தமிழ்த்துறையின் மேனாள் தலைவராவார்.
நிகழ்ச்சியின் மற்றுமொரு அங்கமாக, ‘மொழி எதற்கு? தமிழ் எதற்கு?’ என்ற தலைப்பில் அமைந்த ஒரு கருத்தாடல் நிகழ்ச்சி நடைபெறும். மேலும், தமிழ்மொழிக்குத் தொண்டாற்றிய உள்ளூர்த் தமிழ் அறிஞர் ஒருவருக்கு, ‘ஜமாலியன் விருது’ வழங்கப்படும்.