விளையாட்டு மற்றும் கதை சொல்லல் மூலம் மொழி வளர்ச்சியை மேம்படுத்தும் பட்டறை

2017-TLF---Language-Development-through-Play-and-Storytelling

15 April 2017
காலை 10 - நண்பகல் 12


சிங்கப்பூர்த் தமிழ்ச் சமுதாயத்தினர் நாள்தோறும் தமிழ்மொழியைப் புழக்கத்தில் கொண்டிருப்பதை ஊக்கப்படுத்தும் நோக்கில் கல்சா பாலர் பள்ளி ஆசிரியர்களால் முதன்முறையாகத் தமிழ்மொழி விழாவில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.

பெற்றோர்களுக்கான இந்தப் பட்டறையில் குழந்தை வளர்ச்சி, மொழி வளர்ச்சிக்கான உத்திமுறைகள் மற்றும் பிள்ளைகளை எவ்வாறு பயனுள்ள விளையாட்டுகளில் ஈடுபடுத்தலாம் என்பனபோன்ற கூறுகள் விரிவாக ஆராயப்படும்.

பிள்ளைகளிடம் தமிழ்மொழியின் மீதான ஆர்வத்தையும் பற்றையும் வளர்க்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பெற்றோர்களுக்கு கல்சா பாலர் பள்ளி ஆசிரியர்கள் சில கற்றல் முறைகளைக் கற்றுக்கொடுப்பர். இது நிச்சயம் பெற்றோர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. வீட்டில் விளையாடக்கூடிய சில விளையாட்டுகளின் மூலம் எவ்வாறெல்லாம் தமிழ்மொழியை வளர்க்கலாம் என்பது நிகழ்ச்சிக்கு வரும் பெற்றோர்களுக்குச் சில வழிமுறைகள் மூலம் அறிமுகப்படுத்தப்படும்.

 
Back To Top