08 April 2017
காலை 8.30 - நண்பகல் 12
குறள் பொருள் தேடல்! என்ற தலைப்பிடப்பட்ட இந்நிகழ்ச்சி மாணவர்களிடத்தில் திருக்குறளின் ஆழத்தையும் கருத்துச்செறிவையும் உணர்த்த முற்படுகின்றது. மேலும், குறும்படம் தயாரிக்க உறுதுணையாக இருக்கும் திறன்களைக் கற்றுகொள்ளவும் இந்நிகழ்ச்சி வகை செய்யும். குழு நிலையில் நடத்தப்பெற இருக்கின்ற இந்தப் போட்டி, மாணவர்கள் மொழியை நன்கு கையாளவும், அதனைச் சிறந்த முறையில் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளும் திறனையும் வளர்க்கும் வகையில் அமைக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் மாணவர்கள் திருக்குறளை மையமாக வைத்து, ஒரு குறும்படம் தயாரிக்கவேண்டும். குறும்படத்தின் மையக்கருவாகப் பயன்படுத்தப்படும் திருக்குறளின் பொருள் நன்கு வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கங்கள்:
1. திருக்குறள் நமக்குக் கற்பிக்கும் விழுமியங்களை மற்றும் வாழ்வியல் நெறிமுறைகளை அறிந்துகொள்ளுதல்.
2. இயல்பான சூழ்நிலையில், கருத்துப்பரிமாற்றம் நிகழக்கூடிய ஒரு தளத்தை அமைத்து, அதன்மூலம் மாணவர்களுக்குத் தமிழ்மொழி மற்றும் குறும்படம் தயாரித்தல் ஆகியவற்றில் ஆர்வத்தை உண்டுபண்ணுதல்.