22 April 2017
காலை 11 - பிற்பகல் 12.30
சற்றே வித்தியாசம் நிறைந்த இந்தப் படைப்பாக்க நிகழ்ச்சியில், நிகழ்ச்சியின் ஒரு வழிநடத்துநர் ஒரு கதையை வாசிக்க, மற்றுமொரு வழிநடத்துநர் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களை வாசிக்கப்படும் கதைக்கு ஏற்ப, சித்திரம் வரைய உற்சாகப்படுத்துவார்.
இதன்மூலம், கதையைக் கேட்கும் அனுபவத்தோடு, கதையைக் கேட்டு, வரையும் அனுபவம் ஒப்பிடப்படும். பிறகு, மாணவர்களின் புரிதலை மேலும் வலுப்படுத்த, வரைந்து பார்க்கும் உத்தியைப் பயன்படுத்த அறிமுகம் செய்வர்.
இந்தப் பட்டறையில், பெற்றோர்-பிள்ளை என்ற குழுநிலையில் பங்கெடுப்பு இருக்கும். எளிய தமிழ் சொற்களும் கதைகளும் வாசிக்கப்படும். 4வயதிலிருந்து 8வயதுக்கு உட்பட்ட சிறார்கள் படித்துப் புரிந்துகொள்ளக்கூடிய சொற்கள் அடங்கிய சொற்பட்டியலும் பட்டறைக்கு வருவோருக்குக் கொடுக்கப்படும்.