13 April 2017
மதியம் 3.15 - 5.15
இரண்டு மணிநேரம் நடைபெறவுள்ள இந்தப் பட்டறை, தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களை இலக்காகக் கொண்டு படைக்கப்படுகின்றது. தமிழின வரலாற்றின் ஈடு இணையற்ற மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டிய மனனர்களைப் பற்றிய பொது விளக்கவுரை இருந்தாலும், சோழப் பேரரசு பற்றிய ஆழமான பார்வை இந்தப் பட்டறையில் வழங்கப்படும்.
இதற்கு முக்கியக் காரணம் சோழப் பேரரசு, தமிழ்மொழி, கலை மற்றும் கலாசாரம் ஆகியவற்றுக்கு ஆற்றிய அரிய பங்கினைப் போற்றும் விதமே காரணமாகும். சோழப் பேரரசு பற்றிய விளக்கவுரைக்குப் பின், மாணவர்கள் குழுநிலையில் பிரிக்கப்பட்டு, கருத்துத் தேடல் நடவடிக்கையில் ஈடுபடுவர். எந்தக் குழு கொடுக்கப்பட்டிருக்கும் வினாக்களுக்குச் சரியான விடைகளைக் குறைந்த நேரத்தில் கண்டுபிடிக்கின்றதோ, அக்குழுவே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்குப் பரிசும் அளிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் தமிழ்மொழி மற்றும் தமிழ் அரசர்களின் தொன்மையையும், தமிழின் பொற்காலத்தையும் பற்றி அறிவர். இதன்மூலம், மாணவர்களது தமிழ்மொழி மற்றும் அதன் வரலாற்றின் மீதான பார்வை மேலோங்கி விழிப்புணர்வு அதிகரிக்கும் என ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.