10 April 2016
காலை 10 முதல் மதியம் 1.30 வரையில்
தேசிய அளவில் ஆண்டுதோறும் நடத்தப்பெறும் கதை சொல்லும் போட்டி.
ஐந்தாம் ஆண்டாக இந்த 'மாகோ 2016' என்ற கதை சொல்லும் போட்டி நடைபெறுகின்றது. சுவாரசியமாகவும் புதுமையாகவும் கதை சொல்லும் திறனை மாணவர்களிடையே வளர்ப்பதே இந்தப் போட்டியின் நோக்கமாகும். கதை சொல்லுதல் என்ற நமது பாரம்பரிய உத்திமுறையைப் பயன்படுத்தி, மாணவர்களிடத்தில் தமிழ்மொழியின் சுவையையும் தமிழ்மொழிப் புழக்கத்தின் தன்மையை உயர்த்தவும் இந்நிகழ்ச்சி படைக்கப்படுகின்றது. போட்டியின்போது சொல்ல உற்சாகப்படுத்தப்படுகின்ற கதை வகைகள் நமது பாரம்பரியத்தை மட்டுமே சார்ந்திருக்காமல், சிங்கப்பூரின் பல இன, சமயங்களைச் சார்ந்த கதைகளும் சொல்ல மாணவர்கள் உற்சாகப்படுத்தப்படுவார்கள்.
கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை
தொடர்புக்கு : திரு.ஆனந்தக்கண்ணன் - anadhakannan@aktcreations.com