சொற்களம் 2016

2016-TLF---Sorkalam-2016

09 April 2016
மாலை 7 முதல் இரவு 8.30 வரையில்


நிகழ்ச்சித் தலைப்பு : சொற்களம் 2016

தேதி : 9 ஏப்ரல் 2016 (சனிக்கிழமை)

நேரம் : மாலை 7 முதல் இரவு 8.30 வரையில் 
 
இடம் : மீடியகார்ஃப் அரங்கு. 

நிகழ்ச்சி ஏற்பாடு : மக்கள் கழக நற்பணி பேரவையின் மத்திய வட்டார இநதிநர் நற்பணிச் செயற்குழுவினர் 

கட்டணம் & முன்பதிவு : கட்டணம் இல்லை - முன்பதிவு  அவசியம் 

தொடர்புக்கு : திரு.சிவசங்கர் - Sivashankar_chandra@pa.gov.sg

நிகழ்ச்சி விளக்கம் :
உயர்நிலைப்பள்ளித் தமிழ் மாணவர்களுக்கான தேசிய விவாதப் போட்டி.

தேசிய அளவிலான இந்த விவாதப் போட்டி, மாணவர்களிடையே தமிழ்ப்புழக்கத்தை அதிகரிக்கவும் மாணவர்கள் தமிழ்மொழியில் சரளமாகவும் தன்னம்பிக்கையுடனும் தங்கள் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பாக அமையும் ஒரு முயற்சியே இச்சொற்களம்! கொடுக்கப்படும் தலைப்புகளுக்கு ஏற்ப தமிழில் சிந்தித்து, ஆய்வுகளை மேற்கொண்டு பின் ஆய்வுகளின்போது பெறப்பட்ட தரவுகளை ஒருங்கிணைத்து, நிரல்படக் கருத்துக்களை முன்வைக்க மாணவர்கள் முயலும்போது, அங்குத்  தமிழின் தாக்கம் அதிகம் ஏற்படுகின்றது. இதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு 12ஆம் ஆண்டாகச் சொற்களம் 2016 களம் காண்கின்றது. 

Back To Top