08 September 2024
காலை 10 - மதியம் 4.30
வெற்றி முகாம் 2.0, அனுபவமிக்கப் பயிற்றுவிப்பாளர்கள் வழிநடத்தும் இருவழித்தொடர்பு அங்கங்களை வழங்குகிறது. பங்கேற்பாளர்கள் கதைசொல்லுதல், இசை, நடனம், நாடகம் போன்ற பல்வேறு கிராமியக் கலைகளில் ஈடுபட்டு அதன் வாயிலாகத் தமிழ் மொழியின் செழுமையை அறிந்துகொள்வார்கள். பங்கேற்பாளர்களுக்குப் பாரம்பரிய இசை மெட்டுக்களின் மூலம் தமிழ்மொழியின் சொல்வளத்தை அறிந்துகொள்வதோடு கிராமிய நடன அசைவுகளின்மூலம் பேச்சுத்திறனை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கொடுக்கப்படும்.
ஒவ்வோர் அங்கமும் பண்டைக்காலக் கதைகளை உள்ளடக்கி அமைந்திருக்கும். பங்கேற்பாளர்கள் மகிழ்வுறு கற்றல் அனுபவத்தைப் பெறும்வகையில் இந்த முகாமின் ஒவ்வோர் அம்சமும் மிகுந்த அக்கறையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்ய: https://forms.gle/JpXB1NA8e7dxENey6