01 September 2024
காலை 10 - மதியம் 12:30
இந்நிகழ்ச்சி தமிழ்க் கட்டுரை எழுதும் பயிலரங்காகும். இப்பயிலரங்கு கட்டுரை எழுதுவதன் அடிப்படைகளை எடுத்துரைக்கும் அறிமுக அங்கத்துடன் தொடங்கும். பயிலரங்கில், உள்ளடக்கத்தை உருவாக்குதல், யோசனைகளை வகுத்தல், படைப்பாற்றலை மேம்படுத்துதல் முதலான அத்தியாவசியத் திறன்களில் கவனம் செலுத்தப்படும். சிந்தனைகளையும் யோசனைகளையும் மனக்காட்சிவழி ஒருங்கிணைத்து மனவரைபடம் உருவாக்கும் உத்தியையும் பங்கேற்பாளர்கள் கற்றுக்கொள்வார்கள்.
பயிலரங்கின் நிறைவாக, பங்கேற்பாளர்கள் நல்லதொரு கட்டுரை எழுதுவதற்குத் தேவையான திறன்களையும் உத்திகளையும் பெற்று, தமிழ்க் கட்டுரை எழுதுவது பற்றிய அடிப்படைப் புரிந்துணர்வைப் பெறுவார்கள்.
பதிவு செய்ய: www.indian.sg