தமிழ்ப் பட்டிமன்றம் (இறுதி நிகழ்ச்சி)

2022-TLF---TPKK---Tamil-Debate---Final

16 April 2022
மாலை 6.30


தற்போது இளைஞர்களிடையே தமிழ் பேசும் பழக்கம் குறைந்து வருவதால், மொழி பயன்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான வழிகளை உறுதிசெய்து, தமிழ் பேசும் திறனைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது அவசியம். தமிழ்ப் பட்டிமன்ற விவாதம் என்பது இளைஞர்கள் தமிழில் பேசுவதை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த திட்டமாகும். மேலும், நமது சமூகத்தில் உள்ள சில பிரச்சினைகளைப் பற்றிய தற்காப்பு வாதங்களை வழங்குவதற்கான சித்தாந்தங்கள், கருப்பொருள்கள், எடுத்துக்காட்டுகளைக் கேட்கவும் பேசவும் வகை செய்யும். விவாதத் தலைப்புகள் பேச்சாளர்களைக் கவரும் வகையிலும் நீதிபதி சிறந்த தீர்ப்பளிக்கும் வகையிலும் பரந்த அடிப்படையைக் கொண்டிருக்கும். தமிழ் விவாதப் பேச்சாளர் போட்டியில் உள்ளூர் பள்ளிகள் அல்லது கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 50 போட்டியாளர்கள் சில தேர்வுச் சுற்றுகளில் பங்கெடுத்து, அவர்களிலிருந்து இறுதிச் சுற்றுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும், மேடைப் பேச்சு விவாதங்களில் பேசும் திறனை மேலும் வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கும் விதமாகவும் அமையும். தேர்வுச் சுற்றுகளுக்கு, நாங்கள் உள்ளூர் தமிழ் நிபுணர்களைக் கொண்டு போட்டியாளர்களிலிருந்து பொருத்தமான வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடும். ஒரு மூத்த தமிழ் அறிஞரை தமிழ்ப் பட்டிமன்ற இறுதி அமர்வுக்கு நடுவராக நியமிப்போம்.
Back To Top