குடும்பப் பட்டிமன்றம்

2022-TLF---TITS---Family-Pattimandram

01 May 2022
மதியம் 3 - மாலை 4.30


இப்போட்டி குடும்ப உறுப்பினர்களை (மாணவர்கள் மற்றும் பணிபுரியும் உறுப்பினர்களுடன்) குறிவைத்து தமிழை நேசிக்கவும் தமிழில் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் சிந்தனைத் திறனையும் பொதுப் பேச்சுத் திறனையும் பெற உதவும். குடும்ப விவாதம் என்ற கருத்தாக்கத்தின் மூலம், குடும்ப உறுப்பினர்கள் விவாதத்திற்குத் தயாராகும் போது அவர்கள் தரமான நேரத்தைச் செலவழிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து அறிவைப் பெருக்கிக் கொள்ளவும், குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

1. ஒரு குழுவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் (பெற்றோர்; எல்லா வயதுடைய மாணவர்கள், தாத்தா பாட்டி மற்றும் பணிபுரியும் குடும்ப உறுப்பினர்கள்) பண்பாடு, மொழி, சமூக மேம்பாடு மற்றும் தனிப்பட்ட மேம்பாடு போன்ற தலைப்புகளில் விவாதிப்பார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விவாதத்தில் பங்ககேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இருப்பினும் போதுமான உறுப்பினர்கள் இல்லாத குடும்பம் மற்றொரு குடும்பத்திலிருந்து அதிகபட்சமாக இரண்டு உறுப்பினர்களைச் சேர்க்க அனுமதிக்கப்படுகிறது.

2. பங்கேற்பாளர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசி அல்லது சார்ந்திருப்போர் அட்டை வைத்திருப்பவர்களாக இருக்க வேண்டும்.

3. கல்விக் கழகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் குடும்ப அணிகளை வழிநடத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். நடுவர்கள் குழுக்களின் செயல்திறன் நிலை, குழுப்பணி, தெளிவு, தமிழ் மொழி பேச்சுத் திறன், குறுக்கு விசாரணை மற்றும் மறுப்பு, படைப்பாற்றல் போன்றவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்களைத் தேர்வு செய்வார்கள். நடுவர்களின் முடிவே இறுதியானது.

4. பரிசுகள்:

• முதல் பரிசு: $500 (புத்தகப் பற்றுச்சீட்டு) & சவால் கேடயம் மற்றும் ஒரு சிறிய கோப்பை.
• 2வது பரிசு: $300 (புத்தகப் பற்றுச்சீட்டு) மற்றும் ஒரு சிறிய கோப்பை.
• 3வது பரிசு: $200 (புத்தகப் பற்றுச்சீட்டு) மற்றும் ஒரு சிறிய கோப்பை.
• 4 முதல் 10வது வரை : ஆறுதல் பரிசாகத் தலா $50 (புத்தகப் பற்றுச்சீட்டுகள்).
• ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த பேச்சாளர்களுக்கு - சான்றிதழ்கள்
Back To Top