16 April 2022
நண்பகல் 12 - மதியம் 12.20
சிங்கப்பூர் நினைவுச்சின்னங்கள் நமது பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும், மேலும், இந்த விளக்கக்காட்சிக்காக நாங்கள் மூன்று உள்ளூர் நினைவுச்சின்னங்களை ஆராய்வோம். எங்களின் 20 நிமிட மின்னிலக்க விளக்கக்காட்சியில், மூன்று தமிழ்க் கவிதைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நடனக் காட்சிகளுடன் கவிதை உயிர்ப்பிக்கப்படும்.
கவிதைகள் மூன்று உள்ளூர் கவிஞர்களால் தமிழில் எழுதப்பட்டு விவரிக்கப்படும். ஒவ்வொரு கவிதையும் நினைவுச்சின்னத்தின் வரலாற்றையும் சுவாரசியமான உண்மைகளையும் வெளிப்படுத்தும்.
எங்களுடைய விளக்கக்காட்சி, நமது செழுமையான சிங்கப்பூர் வரலாற்றுடன் தொடர்புபடுத்தி படைக்கப்படும் கவிதைகள் மற்றும் இந்திய நடனத்தின் வாயிலாக, இன்றைய இளையர்கள் மொழியிலும் எழுத்தறிவிலும் ஆர்வம் கொள்ளவும் அதிகமாகக் கற்றுக் கொள்ளவும்
ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.