தமிழவேள் கோ. சாரங்கபாணி நினைவுச் சொற்பொழிவு 2022 ‘படைப்பிலக்கியமும் மொழிபெயர்ப்பும்’

2022-TLF---STTU---Thamizhavel-G-Sarangapani-Memorial-Seminar

01 April 2022
மதியம் 2 – மாலை 4


படைப்பிலக்கியம் மற்றும் இலக்கிய மொழிபெயர்ப்பில் புகழ்பெற்ற அறிஞரான முனைவர் ஜெயந்தி ஸ்ரீ பாலகிருஷ்ணன், 1 ஏப்ரல் 2022 அன்று விரிவுரை ஒன்றை ஆற்றுவார். முனைவர் ஜெயந்தியும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் மொழிபெயர்ப்பு நிபுணர்களும் பயிலரங்குகள் நடத்துவார்கள்.

1 ஏப்ரல் 2022 - கருத்தரங்கு

• 15 நிமிடம் – தமிழவேள் கோ சாரங்கபாணியின் பங்களிப்புகள் பற்றிய அறிமுகம் மற்றும் பகிர்வு
* 1 மணி நேரம்- முனைவர் ஜெயந்தியின் விரிவுரை
• 30 நிமிடம் - கேள்வி பதில் அங்கம்
• 15 நிமிடம் - சுருக்கம் மற்றும் கருத்துரை

பயிலரங்கம் 1 – இலக்கிய மொழிபெயர்ப்பு (நாள் 1)

• பங்கேற்பாளர்கள் உரையின் இலக்கிய அம்சங்களை அடையாளம் காணக் கற்றுக்கொள்வார்கள்.
• பங்கேற்பாளர்கள் வெவ்வேறு மொழிகளில் (சமஸ்கிருதம் அல்லது தமிழ்) கூறுகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதில் முக்கிய வேறுபாடுகளை அடையாளம் காணக் கற்றுக்கொள்வார்கள்.
• பங்கேற்பாளர்கள் கலாசார நுணுக்கங்களைப் பற்றிய ஆழமான பார்வையைப் பெறுவார்கள்
• பங்கேற்பாளர்களுக்கான செயல்பாடுகள் இருக்கும்.

பயிலரங்கம் 2 - சமகால மொழிபெயர்ப்பு

• மொழிபெயர்ப்பின் தன்மை
• அர்த்தத்தை உருவாக்குவதற்கும், மொழிபெயர்க்கப்பட்ட மொழியில் உரையின் படைப்பைத் தீர்மானிப்பதற்கும் உரையின் கூறுகளுக்கு முன்னுரிமை அளித்தல்
• வாசகர்களைக் கண்டறிதல் மற்றும் தொடர்புபடுத்துதல்
• பலதரப்பட்ட கலாசாரம் மற்றும் பல மொழி சூழலில் மொழிபெயர்ப்பு
• ஓர் இலக்கியப் படைப்பை உருவாக்குதல் (தனிப்பட்ட சமர்ப்பிப்பு)

(அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.)
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்காக STTU இணையத்தளத்தில் பதிவேற்றப்படும்.
Back To Top