மின்னிலக்க யுகத்தி் தமிழ் பண்புநலக் கதைகள்

2022-TLF---SKML---Tamil-Ethical-Stories-in-Digital-Era

02 April 2022
காலை 11 - மதியம் 12.15


கதை தயாரிப்பதில், கதை சொல்வதில் புத்தாக்கத்தை உள்ளடக்க, மின் வழிக் கதை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து, பிறகு அவர்களை ஊக்குவிக்க, ஒரு மின் வழிக் கதை போட்டியையும் நடத்துவது நோக்கம். இந்நிகழ்ச்சி “zoom” வழி 2 ஏப்ரல் 2022 அன்று காலை 11 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நடைபெறும்.

1. தமிழில் மின் வழிக் கதை (digital story) எவ்வாறு தயாரிக்கலாம் என்பதைச் செயல்வழி கற்றுக்கொடுக்க ஒரு பயிலரங்கு நடத்தப்படும். இப்பயிலரங்கு “zoom” நிகழ்ச்சிக்கு ஓரிரு மாதங்களுக்கு முன் நடக்கும். இப்பயிலரங்கில் பங்குபெறும் மாணவர்கள், தமிழில் மூன்று மின் வழிக் கதைகளைத் தயாரித்து, நிகழ்ச்சியின்போது பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.

2. நிகழ்ச்சி நாளில், தகுதிபெற்ற பயிற்றுவிப்பாளர் ஒருவர் மின் வழிக் கதையை எவ்வாறு தயாரிப்பது என்பதை “zoom” வழி படைத்துக் காட்டுவார். தயாரிப்பு முறையை விளக்குவதோடு, அதற்குத் தேவையான மென்பொருளையும் அறிமுகப்படுத்துவார். அந்த இலவச மென்பொருளின் பயன்பாட்டில் நாங்கள் கவனம் செலுத்துவோம். மின் வழிக் கதைகளை உருவாக்குவதற்கு இந்த மென்பொருள் எவ்வளவு வசதியானது என்பதைப் பங்கேற்பாளர்கள் தெரிந்துகொள்ளத் துணை புரிவது எங்களின் நோக்கம். இந்த அங்கம் சுமார் 35-40 நிமிடங்களுக்கு இடம்பெறும்.

3. பிறகு, மூன்று மாணவர்கள், அவர்கள் தயாரித்த மின் வழிக் கதைகளைத் தமிழில் படைப்பார்கள். இதுவும் இணையம்வழி (zoom) சுமார் 15 நிமிடங்களுக்கு இடம்பெறும்.

4. மின் வழிக் கதை தயாரிக்கும் போட்டியின் விவரங்கள் அறிவிக்கப்படும். இதில் 11 வயது முதல் 15 வயது வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம்.

5. போட்டியாளர்கள், தேசிய நூலகத்திலிருந்து ஒரு தமிழ்ப் புத்தகத்தை இரவல் வாங்கி, அதிலிருந்து ஒரு கதை, அல்லது கதையின் பகுதியை 2-3 நிமிட மின் கதையாகத் தயாரித்து அனுப்ப வேண்டும்.

6. மின் கதைகளை அனுப்புவதற்கான இறுதி நாள் 16 ஏப்ரல் 2022.

7. நீதிபதிகள் படைப்புகளைப் பரிசீலித்து வெற்றியாளர்களைத் தீர்மானிப்பார்கள். சிறந்த படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும். முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளும், ஐந்து ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.

8. வெற்றியாளர்களுக்கு 30 ஏப்ரல் 2022 தேதிக்குள் பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்.

9. தமிழ்மொழி விழா நடக்கும் மாதத்தில் இவை அனைத்தும் நடைபெறும்.
Back To Top