தமிழும் கலையும்

2022-TLF---Makoolam---Thamizhum-Kalaiyum

09 April 2022
மாலை 6 - இரவு 7.30


தமிழும் கலையும் பிரிக்க முடியாதது. கலைகளின் சாரம்தான் கலாசாரம். தமிழ் கலாசாரம் இல்லாமல் தமிழர்கள் இல்லை. இந்தக் கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் கலைகளை வளர்ப்பது அவசியமாகும். தமிழர் கலைகள் இசை, பரதம், நாட்டுப்புறக் கலைகளை உள்ளடக்கியது. இங்கு மகூலம் கலைக்கூடம் பரதக் கலை மற்றும் நாட்டுப்புறக் கலைகளை படைக்கவுள்ளது.

நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல பெரும்முயற்சி எடுத்துக்கொண்டும் அதை செய்துகொண்டும் இருக்கிறோம். இக்காலச் சூழலில் கலையை தடையின்றி நம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியே இந்நிகழ்ச்சியாகும். சங்ககால காப்பியங்களிலும் இலக்கியங்களிலும் நம் தமிழ் கலைகளைப் பற்றி நிறைய குறிப்புகளும் சான்றுகளும் உள்ளன.

இந்நிகழ்ச்சியில் தமிழுக்கும் கலைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றி வெளிபடுத்தப்படும். தமிழ் கவிஞர்களான பாரதியார், பாரதிதாசன், அருணாசைக் கவிராயர், ஊத்துக்காடு வெங்கட சுப்பையர், முத்துசுவாமி தீக்சிதர்,போன்றோர் எழுதிய பாடல்களுக்கு நடனமும், திருக்குறள் நடனம், திருக்குற்றால குறவஞ்சி நடனம் மற்றும் நாட்டுபுறக்கலைகளான கோலாட்டம், ஒயிலாட்டம் போன்றவற்றை படைப்பதன் வழி நம் கலாசாரமும் பண்பாடும் வெளிப்படும்.
Back To Top