30 April 2022
காலை 10 - நண்பகல் 12
வரைகலை, இருவழித் தொடர்பு ஆகியவற்றைக் கொண்டு புத்தாக்கச் சிந்தனையையும் தமிழில் படிப்பதையும் ஊக்குவிப்பது கதை நேரம் 2.0 நிகழ்ச்சியின் நோக்கம்.
தமிழ் மொழி விழாவில் உருவாக்கப்பட்ட www.kathaineram.com தளத்தை அடிப்படையாகக் கொண்டது கதை நேரம் 2.0.
இந்த 2.0 பதிப்பில், ‘புத்தாக்கம்’ என்ற கருப்பொருளுக்கு ஏற்ப 4 தமிழ் ஒலிப் புத்தகங்களை வெளியிடவுள்ளோம்.
இவை உள்ளூர் ஆசிரியர்களாலும் எழுத்தாளர்களாலும் இயற்றப்பட்டவை.
சிங்கப்பூரையும் சிங்கப்பூரில் நஏற்பட்ட அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டவை அந்தக் கதைகள்.
தமிழ்க் கதைகளை வாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் அல்லது மாணவர்கள் தங்கள் வாய்மொழித் தேர்வுகளின் போது கேட்கவும் பேசவும் இந்த ஒலிப் புத்தகங்கள் உதவி செய்கின்றன.
இதோடு, உள்ளூர் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட 4 உயிரோவியக் கதைகளும் உருவாக்கப்படவுள்ளன. இந்தக் கதைகள் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் படைப்புகளுக்கு உயிர் கொடுக்க விரும்புபவர்களால் எழுதப்பட்டவை.