தமிழின் ஏழு அற்புதங்கள்

2022-TLF---Brahmastra-Ensemble---7-Wonders-of-Tamil

30 April 2022
இரவு 7 - 9


சிங்கப்பூர் இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர்களைக் கொண்ட பிரம்மாஸ்திரா இசைக்குழுவினர் சொந்தமாக 7 பாடல்களைத் தயாரித்து வெளியிடவிருக்கின்றனர். அந்தப் பாடல்கள் 2022ஏப்ரல் மாதம் நடக்கும் இசை ஆல்பம் வெளியீட்டில் வெளியிடப்படும்.

இந்த இசையமைப்பில் 7 உள்ளூர் பாடலாசிரியர்கள் இடம்பெறுவார்கள். அவர்களில் 3 பேர் தற்போது சிங்கையின் தமிழ் எழுத்துலகில் இயங்கிவரும் எழுத்தாளர்களான அஷ்வினி செலவராஜ், தினேஷ் செல்வராஜ், ஜெயா ராதாகிருஷ்ணன் ஆகியோர். மற்ற 4 எழுத்தாளர்களைப் பொறுத்தவரை, மேற்குறிப்பிடப்பட்டுள்ள கருப்பொருள்களின் அடிப்படையில் இயற்றப்பட்ட பாடல்களை வளர்ந்து வரும் எழுத்தாளர்களும் தமிழில் எழுதவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களும் ஒருங்கிணைப்பு குழுவினரிடம் சமர்ப்பிக்கலாம் என்ற அழைப்பை ஒருங்கிணைப்பு குழு முன்வைக்கும் (open call). அந்த அழைப்பிற்கு அனுப்பப்படும் தலைசிறந்த நான்கு கவிதைகளையும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களையும் ஒருங்கிணைப்பு குழு தேர்வு செய்யும். அதோடு அவர்களின் பாடல்கள் இசை வடிவமும் பெறும். இசையமைப்பையும் தயாரிப்பையும் பல விருதுகளை வென்ற உள்ளூர் இசைக் கலைஞர் திரு. நிரஞ்சன் பாண்டியன் மேற்கொள்வார்.

7 பாடல்களும் கவிதைகளும் தமிழ் மொழியில் 7 கருப்பொருள்களை உள்ளடக்கும்:

1. வேர்கள்
2. கலாசாரம்
3. மரபு
4. கதைகள்
5. உரையாடல்கள்
6. உறவுகள்
7. சமகால நீட்டிப்புகள்

7 பாடல்களில் சிங்கப்பூரின் உள்ளூர் பாடகர்கள் இடம்பெறுவார்கள். நிகழ்ச்சிக்காக நாங்கள் அழைக்கத் திட்டமிட்டுள்ள பாடகர்களின் பெயர்கள் பின்வரும் பட்டியலின்படி:

1) நந்திதா
2) சுவாதி சுரேஷ்
3) சுஷ்மா சோமசேகரன்
4) சித்ரா பூர்ணிமா
5) இர்பானுல்லா
6) சாய் விக்னேஷ்
7) பிரவின் சைவி

ஒரு புகழ்பெற்ற சஅனைத்துலக பாடகரும் (எ.க, ஹரிசரண்) 7 உள்ளூர் பாடகர்கள் வரையிலும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படலாம். இந்தப் பாடல்கள் நேரலையில் ஒலிபரப்பப்பட்டு உலகம் முழுவதும் நேரடியாக வெளியிடப்படும். வசந்தகுமார் அன்பழகனின் பாடல் வரிகளை உள்ளடக்கிய காணொளிகளைப் பயன்படுத்தி பாடல்களைப் பகிரவும் திட்டமிட்டுள்ளோம்.
Back To Top