பாரதியும் நானும்

2022-TLF---Athipathi---Bharathiyar-and-I

30 April 2022
இரவு 8


'Innovation ' (புத்தாக்கம்) என்ற வார்த்தை, புதுப்பித்தல் என்ற அர்த்தம் கொண்ட 'innovatus' எனும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. இந்நாடகம் பாரதியைப் பற்றிய ஒரு பண்பாட்டுப் புதுமையாகவும், இதுவரை இல்லாத வகையில் அவரைப் புதுப்பிக்கும் விதமாகவும் உள்ளது. பாரதியும் நானும் பாரதியின் வாழ்க்கையை அவரது குடும்ப உறுப்பினர்கள், சக இலக்கியவாதிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், பொதுமக்கள் ஆகியோரின் பார்வையில் காட்டுகிறது. சுப்ரமணிய பாரதி (1882-1921) தனித்துவமானவர். ஏனெனில் அவர் ஒரு கலாசார கண்டுபிடிப்பாளராக இருந்தார். அவர் தமிழில் நவீனப் படைப்புகளிலும் சீர்திருத்தக் கருத்துகளிலும் மீது இன்னமும் நிலையான செல்வாக்கைக் கொண்டுள்ளார். கைவசம் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி, நாடக ஆசிரியர் புகழேந்தி, பாரதியின் வாழ்க்கையையும், அதில் அவர் சந்தித்த பல இன்னல்களையும் கதையாகப் பின்னியுள்ளார். அதோடு, அவர் குறிப்பிட்ட கவிதைகள் மற்றும் அவற்றின் உத்வேகங்களை எவ்வாறு, எப்போது எழுதினார் என்பதையும் ஆராய்ந்துள்ளார். சமீபத்திய புதுமையான மென்பொருளையும் உபகரணங்களையும் பயன்படுத்தி நாடகம் பச்சைத் திரையில் படைக்கப்படும்.
Back To Top