23 April 2022
மாலை 6 - இரவு 8
சிங்கப்பூர்த் தமிழ் எழத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் முத்தமிழ் விழா, நடனம், பாலர் பள்ளிக்கும் தொடக்கப்பள்ளிகளுக்குமான மாறுவேடப் போட்டிகளில் வெற்றி பெற்ற படைப்புகளை வெளியிடுதல், வெற்றி பெற்ற மாணவர்களின் பங்கேற்பு, மூத்த எழுத்தாளர் ஒருவருக்கு தமிழவேள் விருது வழங்குதல், பல்வேறு இலக்கியப் போட்டிகளின் வெற்றியாளர்களின் அறிவிப்பு, உள்நாட்டு இளம் பேச்சாளர்களின் சிறப்புரைகள் ஆகிய பல சுவையான அங்கங்களை உள்ளடக்கியது.
தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை வலியுறுத்தும் முத்தமிழ் விழா, தமிழ் மொழி மாதத்தில் நடைபெறும் விழாக்களில் சிங்கப்பூர்த் தமிழர்களை மிகவும் கவர்ந்த ஒரு விழாவாகும். மாணவர்களுக்கான போட்டிகள், அவர்கள் தங்கள் தாய்மொழிப் பாடத்தில் சிறப்பாகச் செயல்பட உதவுகின்றன. அது மட்டுமின்றி நமது தாய்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் பணியையும் அப்போட்டிகள் செய்கின்றன. பொது மக்களுக்கான போட்டிகள் சில புதிய எழுத்தாளர்களை அடையாளம் காண உதவுகின்றன. முத்தமிழ் விழா மாணவ மற்றும் இளம் எழுத்தாளர்களுக்கு சிறந்த தளம் அமைத்துக் கொடுப்பதோடு, நாளடைவில் சிங்கப்பூரில் தமிழ் மொழி மற்றும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் ஒரு சிறப்பான நிலையை அடைய உறுதுணையாக இருக்கிறது. இலக்கியச் சிறப்புரை தமிழின் சிறப்பையும், நுணுக்கத்தையும் சிங்கப்பூர் இளையர்களிடத்திலும், மாணவர்களிடத்தில் எடுத்துச்சொல்லும் விதத்தில் அமைகிறது.