31 March 2019
9.00 am to 1.00 pm
தமிழ்மொழியை சுவாரஸ்யமான, புத்தாக்கம் மிகுந்த வழியில் பயன்படுத்துவதை ஊக்குவிக்க முனைகின்றது, ‘களம்’. தமிழ்மொழியில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம், அவர்கள் தமிழ்மொழியைப் பாடத்துடன் தொடர்பில்லாத வழிகளில் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில், புத்தாக்கம் மிகுந்த இரண்டு போட்டிகள் நடத்தப்படும்.
- புகைப்படப் போட்டி.இந்தப் போட்டியில், பங்கேற்பாளர்கள், கொடுக்கப்பட்டுள்ள கதையை ஒட்டிக் கதை ஒன்றை சொல்லும் வகையில், 10 முதல் 15 புகைப்படங்கள் கொண்ட ஒரு தொகுப்பை உருவாக்குவார்கள்.பங்கேற்பாளர்கள், புகைப்படங்களுக்கான தலைப்புகள் மற்றும் புகைப்படங்களைப் படைப்பதன் மூலம், தங்களது சிந்தனையாற்றலையும் மொழியாற்றலையும் வெளிப்படுத்தவேண்டும்.
- ‘மீம்ஸ்’ உருவாக்கும் போட்டி.இந்தப் போட்டியில், பங்கேற்பாளர்கள், மாணவர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் காணொளி வகையிலான ‘மீம்ஸ்களை’ தலைப்புகளுடன் உருவாக்கவேண்டும்.