28 April 2018
காலை 8.30 - மதியம் 4.30
தொடர்பு, தகவல் அமைச்சும், கல்வி அமைச்சும் இணைந்து தொடக்கநிலை நான்கு, ஐந்தில் பயிலும் சுமார் 100 மாணவர்களுக்கு தமிழ் மொழிபெயப்பு முகாமை நடத்துகின்றன. இந்த முகாம், தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் ‘மொழிபெயர்ப்பில் சமூகம்’ எனும் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்படுகிறது. இளம் வயதிலிருந்தே நல்ல மொழிபெயர்ப்புத் திறன்களை வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைப்பதும், இருவழி பரிமாற்றத்துடன்கூடிய குதூகலமான மொழிபெயர்ப்பு அனுபவத்தை அவர்களுக்கு வழங்குவதும் இந்த முகாமின் நோக்கம்.
இளம் மாணவர்களிடையே தமிழ் மொழிபெயர்ப்புப் பற்றிய விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் அதிகரிப்பதற்கான சாத்தியங்களைத் தொடர்பு, தகவல் அமைச்சு ஆராய்கிறது. திட்டத்தைத் தொடங்கியபோது, முதல் ஈராண்டுகளுக்கு மொழிபெயர்ப்புப் பயிலரங்குகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இந்த முயற்சியை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும் வகையில் இந்த ஆண்டு தமிழ் மொழிபெயர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.