21 April 2018
இரவு 7 - 11
‘கண்ணதாசன் ஒரு சகாப்தம்’ என்பது, பங்கேற்பாளர்களுக்கு அறுபதுகள் மற்றும் எழுபதுகளை ஞாபகப்படுத்தும் பேச்சுகள் மற்றும் நடவடிக்கைகள் அடங்கிய மனதை விட்டு அகலாத கலை இரவாக அமையும். இந்த நிகழ்ச்சியானது தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தைப் பயன்படுத்தி, ஒரு கவிஞராகவும் தமிழ் திரைப்பட பாடலாசிரியராகவும் கண்ணதாசன் படைத்துள்ள அற்புதப் படைப்புகளின் செழுமை மற்றும் முழுமையைக் கொண்டிருக்கும்.
இந்த நிகழ்ச்சி உள்ளூர் கலைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான தளமாக அமையும். அதில் அவர்கள் காலத்தை விஞ்சிய கண்ணதாசன் பாடல்களுக்கு நடிக்கலாம், மற்றும் இணை உருவாக்கம் செய்யலாம். மேலும் இந்த நிகழ்ச்சி அவர்களின் திறமையை வெளிபடுத்த ஒரு வாய்ப்பினை வழங்கும். பங்கேற்பாளர்களுக்கு எளிய பாடல்களை எழுதும் செயல்முறை அமர்வும் உண்டு. அவர்கள் எழுதிய பாடல்கள் இறுதியில் தொகுக்கப்படும்.