07 April 2018
காலை 9 - மதியம் 3
“களம்” தமிழைப் பயன்படுத்துவதை சுவாரசியம் மற்றும் படைப்பாக்கம் நிறைந்த முறையில் ஊக்கப்படுத்துகிறது. தமிழ் மொழியில் ஆர்வமுடைய மாணவர்களுக்கு உதவுவதற்காகவும், தமிழின் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதற்கும் இரு புத்தாக்கப் போட்டிகள் உள்ளன.
“என்னங்க நடக்குது” போட்டியில் பங்கேற்பாளர்கள் ஹாலிவுட் திரைப்படக் காட்சிகளை அவர்களுடைய கற்பனையைப் பயன்படுத்தி வித்தியாசமாக ஒரு தமிழ் நாடகமாக மறுஉருவாக்கம் செய்ய வேண்டும். விளம்பர போட்டியில் கொடுக்கப்பட்ட பொருளை ஒரு வானொலி விளம்பரம் மூலம் விற்பனை செய்யும் பல்வேறு படைப்பாக்க முறைகளைப் பற்றி போட்டியாளர்களைச் சிந்திக்க வைக்கிறது.