01 April 2017
காலை 10.00 - மதியம் 1.00
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை, யுத்தம் 2017 எனும் சொல்வள மேம்பாட்டுப் போட்டியை இவ்வாண்டு தமிழ்மொழி விழாவினை ஒட்டி, இரண்டாம் ஆண்டாக நடத்தவுள்ளது.
இது உயர்நிலை மற்றும் புகுமுக வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியாகும்.
மாணவர்களின் சொல்வளத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடைபெறுவதோடு, ஒரு குதூகலமான சூழ்நிலையில், போட்டியாக இந்நிகழ்ச்சி நடைபெறும். மிக முக்கியமாக, சிங்கப்பூரில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் தமிழ்ச் சொற்களை மாணவர்கள் மத்தியில் நிலைபெறச் செய்யும் வகையில், சிங்கப்பூர் சார்ந்த தமிழ்க் கலைச்சொற்கள் அதிகம் அறிமுகப்படுத்தப்படும்.
போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கும் அவர்களை ஊக்கப்படுத்தவரும் ஆதரவாளர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும். ஆதரவாளர்கள் பெரும் திரளாக வந்து, போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதோடு, உடன் நடைபெறும் பார்வையாளர்களுக்கான போட்டியிலும் கலந்துகொள்ளலாம்.