09 April 2017
காலை 10 - மதியம் 1
தமிழ் வரிவடிவத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்நிகழ்வில் பங்கேற்கும் சிறார்கள் அவ்வரிவடிவங்களுக்கு வண்ணம் தீட்ட வேண்டும். சீனத் தூரிகைக் கலையை முன்மாதிரியாகக் கொண்டு, தமிழில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.
புத்தாக்கமும் கலை உணர்வும் மிக்கச் சிறார்களின் வண்ணம் தீட்டும் திறமை நிச்சயம் பார்வையாளர்களையும் பங்கேற்போரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்பது நிச்சயம்.