14 April 2017
மதியம் 2 - 4
தமிழ் வரிவடிவத்தின் பரிணாம வளர்ச்சியை அறிந்துகொள்ள உறுதுணையாக விளங்குவது கல்வெட்டுகள் சார்ந்த ஆய்வுகள். இந்த ஆய்வுகள், தென்னிந்தியப் பகுதிகளுக்கும் தென்கிழக்காசியப் பகுதிகளுக்கும் இடையே உள்ள உறவுநிலைகளைப் பற்றி அறிந்துகொள்ள வழிவகுக்கின்றன. தென்கிழக்காசியப் பகுதிகளில் தென்னிந்திய வரிவடிவங்களைக் கொண்ட கல்வெட்டுகள் பற்றிய புரிதல் குறைவாகவே உள்ளது.
இந்தப் பட்டறையின் மூலம்:
1) தென்கிழக்காசியப் பகுதியில் தமிழ் வரிவடிவங்களைத் தாங்கிய கல்வெட்டுகள் மற்றும் அவை சார்ந்த வரலாற்றுச் சான்றுகளைக் கண்டறிந்து, அதன்மூலம் வரலாற்றுத் தொன்மையை அறிய முற்படுதல்.
2) வரிவடிங்களின் ஆதிதன்மையையும் அவை கடந்து வந்துள்ள வளர்ச்சி நிலையையும் சான்றுகளின் அடிப்படையில் கண்டு, நிகழ்ச்சியில் பங்கேற்போரிடையே தமிழ்மொழியின்பால் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்த முயல்தல்.
3) நிகழ்ச்சியில் பங்கேற்போரை, இந்திய மரபுடைமை நிலையத்தின் நிரந்தரக் காட்சிக்கூடங்களில் உள்ள காட்சிப்பொருள்களின் வழியாக, தென்னிந்தியப் பகுதிகளுக்கும் தென்கிழக்காசியப் பகுதிகளுக்கும் இடையே நிலவி வந்த உறவுநிலையைப் படம்பிடித்துக்காட்ட முற்படுதல்.
இந்தப் பட்டறை மூன்று பகுதிகளாக நடத்தப்படும்.
1) தமிழ் கல்வெட்டியியல் பற்றிய ஓர் அறிமுகமும் தென்னிந்தியப் பகுதிக்கும் தென்கிழாக்காசியப் பகுதிகளுக்கும் இடையே நிலவிய உறவுநிலைப் பற்றிய தேடலும்;
2) தமிழ் வரிவடிவத்தின் தொடக்கமாகிய பிராமி எழுத்து வகையிலிருந்து, இன்றைய வட்டெழுத்து வரை தமிழ் வரிவடிவம் கண்டுள்ள பரிணாம வளர்ச்சி பற்றிய விளக்கமான பார்வை மேற்கொள்ளப்படும்.
3) இந்திய மரபுடமை நிலையத்திலுள்ள நிரந்தரக் காட்சிக்கூடங்களுக்குச் சென்று வரிவடிவங்களைப் பற்றிய சான்றுகளின் அடிப்படையில் விளக்கவுரை இடம்பெறும்.