23 April 2017
மதியம் 5 - மாலை 6.30
தமிழ் இசையின் தனித்தன்மையைப் பலருக்குத் தெரியப்படுத்தவும், தமிழ் இசையின் நீண்ட பாரம்பரியத்தைப் புரிய வைக்கவும் இந்த நிகழ்ச்சி முனைகின்றது. ஆதிகாலத்துத் தமிழ் இசைப்பாடல்கள் தொடங்கி, தற்காலத் தமிழ் இசைப்பாடல்கள் வரை, ஒருசில பாடல்களை எடுத்துக்கொண்டு, ஓர் இசைக் கச்சேரியாக இந்த நிகழ்ச்சி இடம்பெறும்.
சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் தஞ்சாவூர்ப் பாரம்பரிய இசைப்பள்ளியின் நிறுவனரும் அவர்தம் மாணவர்களும் இந்நிகழ்ச்சியைப் படைப்பர். மேலும், இவர்களுக்குப் பக்கபலமாக, சிங்கப்பூரின் பிரசித்திப்பெற்ற இசை வல்லுநர்கள் நிகழ்ச்சியில் இடம்பெறுவர்.