08 April 2017
காலை 10 - 11.30
இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கணினி மற்றும் இணையம் சார்ந்த கூறுகளில் தமிழ் மொழியியலின் பங்கும், அதன் முக்கியத்துவமும் குறித்து கூடுதல் கவனம் செலுத்த இருக்கின்றனர். மொழியியலின் வாயிலாக மென்பொருள்களின் உருவாக்கம் மற்றும் பயன்பாடு பற்றிய கலந்தாய்வும் நடைபெறும். தமிழ் இணைய உலகின் மிக முக்கியமானவர்களில் சிலர், பேச்சுத் தொழில்நுட்பம், இயந்திரம்சார் மொழிபெயர்ப்பு மற்றும் தரவுகளின் இன்றியமையாமை குறித்துப் பேச உள்ளனர்.