08 April 2017
மாலை 6.30
தமிழ் எழுத்துலகின் பிதாமகன்களுள் ஒருவராகிய கல்கியின் மிக முக்கியப் படைப்புகளுள் ஒன்று, சிவகாமியின் சபதம். இது 1944 ஜனவரி முதல் 1946 ஜுன் மாதம் வரை, நாடகமாக வலம் வந்து, பின் 1948இல் புத்தகமாக வெளிவந்தது. கல்கியின் இன்னொரு மாபெரும் எழுத்தோவியமான ‘பொன்னியின் செல்வன்’ என்ற படைப்போடு, ‘சிவகாமியின் சபதம்’ இன்றளவும் பேசப்படுகின்றது என்றால் அதன் தனித்தன்மையே அதற்குக் காரணம்.
7ஆம் நூற்றாண்டைப் பின்புலமாகக் கொண்டு புனையப்பட்ட இந்த வரலாற்று நாவல், அக்காலக்கட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளையும் நாயகர்களையும் தன்னுள் கொண்டிருக்கத் தவறவில்லை. மானம், காதல், நட்பு எனும் மனித உணர்வுகளை மையப்புள்ளிகளாகக் கொண்டு இந்நாவல் புனையப்பட்டுள்ளது.
இந்த வரலாற்று நாவலை, சிங்கப்பூரில் இயங்கிவரும் ஷாமா கலைப்பள்ளியும் இலங்கையில் செயல்படும் தியாகராஜர் கலைக்கோவில் அமைப்பினரும் இணைந்து படைக்க இருக்கின்றனர். பாடல்கள் அனைத்தும் தமிழில் இருப்பதோடு, அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில், இடையிடையை விளக்கங்களும் கொடுக்கப்படும்.