23 April 2017
காலை 9.30 - மதியம் 3
இந்த உயர்நிலை சிறுகதைப் பயிலரங்கு மொத்தம் மூன்று மாதங்களுக்கு நடைபெற்று, இறுதி நிகழ்வாக 23 ஏப்ரல் 2017 அன்று நடைபெறும். இந்தப் பயிலரங்கு எழுத்தாளர்களுக்குரியது. இந்தப் பயிலரங்கில் பங்கேற்க விரும்புவோர் குறைந்தது ஒரு கதையாவது எழுதியிருக்கவேண்டும். இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தப் பயிலரங்கு இவ்வெழுத்தாளர்களை இன்னும் பட்டைத் தீட்டி, மேன்மேலும் சிறப்பாக எழுத வைப்பதேயாகும். கதை எழுதும் உத்திமுறைகளும் பட்டறையில் பகிர்ந்து கொள்ளப்படும்.
பட்டறையில் கற்பிக்கப்படும் ஒவ்வொரு உத்திமுறையையும், எழுத்தாளர்கள் உள்வாங்கி, புரிந்துகொள்ளும்விதமாக, அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். எழுத்தாளர்களின் இந்தப் பயிற்சிகள்/படைப்புகள் எழுத்துலகில் சிறந்து விளங்கும் எழுத்தாளர் ஒருவரால் மதிப்பீடு செய்யப்பட்டு, சிறந்த படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும். மேலும், ஸ்கைப் மூலமாக, ஒரு சில பிரபல தமிழ் எழுத்தாளர்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர் கலந்துரையாடுவர்.