15 April 2017
மாலை 6 - இரவு 8
தொழில் புரட்சி, அறிவியலின் அதிவேக வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியன இன்றைய நவீன வாழ்க்கைமுறையின் தன்மையை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளன. விரைவு உணவு, கையடக்கத்தொலைபேசியின் ஆதிக்கம், மற்றும் மளவுளைச்சல் நிறைந்த வாழ்க்கைமுறை ஆகியன பலர் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டதைக் காண முடிகின்றது. கூட்டுக்குடும்பங்களில் இருந்த ஒற்றுமையும் வழிவழிவந்த வாழ்க்கைமுறைமை பற்றிய வாழ்வியல் முறைகளைப் பற்றிய பகிர்வும் இன்றைய சூழ்நிலையில் இல்லாது போய்விட்டது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏற்பாட்டாளர்கள் நமது பாரம்பரிய உணவு முறைகளைப் பற்றியும் நமது சமையல் பொருட்கள் மற்றும் அவை சார்ந்த செய்திகளையும் பங்கேற்பாளர்களோடு பகிர்ந்து கொண்டு, ஓர் ஆரோக்கிய வாழ்க்கைமுறை நோக்கிய பயணத்தைத் தொடங்கி வைக்க விரும்புகின்றனர். எளிதில் கிடைக்கக்கூடிய சமையல் பொருட்கள், அவற்றின் மருத்துவத்தன்மைகள் மற்றும் நாம் ஆரோக்கியமாக வாழ என்னென்ன உத்திமுறைகளைப் பயன்படுத்தலாம் போன்ற குறிப்புகள் இந்நிகழ்ச்சியின்போது பகிரப்படும்.