மாகோ – தேசிய தமிழ் கதை சொல்லும் போட்டி

2017-TLF---MAGO-National-Tamil-Storytelling-Olympiad

13 April 2017
மதியம் 2 - 5


இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும். கதை சொல்லுதலை இனிமையான, ஈடுபாடுமிக்கப் புத்தாக்க நிகழ்ச்சியாகப் படைப்பதே நோக்கமாகும்.

காலம் காலமாகக் கதை சொல்லுதல் நமது பாரம்பரியத்தில் வேரூன்றிய ஓர் இலக்கிய வடிவமாக இருந்து வந்துள்ளது. இதனைப் போற்றும் விதமாகவும் மொழியின்பால் மாணவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படவும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

இந்நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக நடத்தப்படும் கதை சொல்லும் போட்டியின் நோக்கங்கள்:
1) நமது இளைய சந்ததியினர் வரலாற்று ரீதியில் முன்பு இருந்த மொழிசார் வளமை மற்றும் கலாச்சார ஆளுமைகளை மீண்டும் அறிந்துகொள்ள வாய்ப்பளித்தல்;
2) நமது அன்றாட வாழ்வில் நாம் கவனிக்காத மிக முக்கியமான சில அம்சங்களைப் பற்றிப் போட்டியாளர்கள் முன்வைத்து, பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்த முயலுதல்;
3) பல்லின மக்கள் வாழும் சிங்கப்பூரில் ஓர் இனத்தார் மற்றோர் இனத்தாரின் மொழி, கலாச்சாரம் மற்றும் இலக்கியங்களைப் பரிமாறிக்கொள்வதோடு, படித்து இன்புற வாய்ப்பளித்தல். 
போட்டிகள் மேற்கண்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படும். 

Back To Top