கலக்கல் நாடக விழா 2017

2017-TLF---Kalakkal-Drama-Festival

16 April 2017
மதியம் 2 - 5


கலக்கல் நாடக விழா ஆண்டுதோறும் நடைபெறும் நாடகம் தொடர்பான கொண்டாடட்டங்களோடு, நாடகம்சார்ந்த கலந்துரையாடல் மற்றும் சிறப்பு அங்கங்கள் நிறைந்த ஒரு துடிப்பான மேடையாகும்.

இந்த நாடகவிழா மாணவர்களுக்கு நாடகம் சார்ந்த பல்வேறு கூறுகளை அறிமுகம் செய்து, அவர்கள் அதில் பரிச்சயம் பெறவும் வழிவகை செய்கின்றது. நடித்தல், ஆடுதல், எழுதுதல், தயாரித்தல், வடிவமைத்தல் மற்றும் நாடக உருவாக்கம் செய்தல் போன்ற முக்கிய நாடகக்கூறுகள் பற்றிய ஓர் அறிமுக நிகழ்ச்சியாகக் கலக்கல் நாடக விழா 2017 அமையும் என்பது திண்ணம்.

ஒன்பதாம் ஆண்டாகக் களம் இறங்கும் இவ்விழா, புத்தாக்கமும் புதிய துடிப்புடனும் மாணவர்களைக் கவர முற்படுகின்றது. வழக்கமாகத் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளுக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, இந்தாண்டு பாலர் பள்ளி மற்றும் புகுமுக வகுப்பு மற்றும் மேல்நிலைக் கல்விகூடங்களுக்கும் தனது கதவுகளைத் திறக்க உள்ளது.

 
Back To Top