மெய்நிகர் உலகில் புத்தாக்கத் தமிழ்

2017-TLF---Innovative-Tamil-through-VR-and-AR

15 April 2017
மதியம் 2 - மாலை 6


தகவல்தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுவரும் துரித வளர்ச்சியின் காரணமாக, மெய்நிகர் உலகம் சார்ந்த செயலிகள் இன்று சிங்கப்பூரர்களிடையே மிகப் பிரபலமாக விளங்கி வருகின்றன. இவை நமது வாழ்க்கை முறையைக்கூட மாற்றி அமைக்கும் தன்மையைக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளராகிய பிக்ஸிபிட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர், தமிழில் உள்ள தரவுகளின் அடிப்படையில் மெய்நிகர் உலக அனுபவத்தைப் பங்கேற்பாளர்களுக்கு அளிக்க இருக்கின்றனர். மேலும், சில முக்கியச் செயலிகளின் பயன்பாட்டோடு, பங்கேற்பாளர்களுக்காகப் போட்டிகளும் நடத்தப்படும். 

இரண்டு மணிநேரம் நடைபெற உள்ள இந்தப் பட்டறையில், புதிய தகவல்தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளோடு, செயல்முறையாகப் பார்வையாளர்களும் சில செயலிகளைப் பயன்படுத்தி, மெய்நிகர் உலகத்தின் தனித்தன்மையை உணர முற்படுவார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் விரும்புகின்றனர். 

 
Back To Top