06 April 2017
மதியம் 1.30 -2.30 & மதியம் 3.30 -4.30
700 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில், குறிப்பாக, ஃபார்ட் கேனிங் குன்றில் கண்டெடுக்கப்பட்ட ஓர் அரிய பழங்கால ஆபரணத்தை அடிப்படையாகக் கொண்ட புகைப்படத்தை மூலமாகக் கொண்டு இந்த நாடகம் படைக்கப்படும். இந்தப் புகைப்படத்தைச் சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் வழங்கியுள்ளது.
ஃபார்ட் கேனிங் குன்றில் இரவுக்காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் சில வீரர்கள், தூக்கத்திலிருந்து விழித்திருக்கச் சில விடுகதைகளைத் தங்களுக்குள் தொடுத்தவண்ணம் இருப்பார்கள். ஆயுதங்களாக வைத்திருக்கும் வில்லை இசைக்கருவியாக்கிக்கொண்டு, கதை பாணியில் விடுகதைகளைத் தொடுப்பார்கள். தமிழர்ப் பாரம்பரிய நாடக வடிவங்களுள் ஒன்றாகிய தெருக்கூத்து பாணியில் இந்த நாடகம் அமையும்.
இந்த நாடக அரங்கேற்றம் பார்வையாளர்களையும் ஈடுபடுத்தும் வண்ணம் அமையப்பெற்றிருக்கும். நாடகத்தைக் காணும் சராசரிப் பார்வையாளர்களாக இல்லாமல், இந்நாடகத்தைக் காணவருவோர், நாடகத்தில் ஒரு பாகமாக விளங்கும் வண்ணம், புத்தாக்கம் நிறைந்த உத்திமுறைக் கையாளப்படும்.