தேடல் 2016

2016-TLF-Thedal-by-Singai-Tamil-Sangam

16 April 2016
காலை 8 முதல் மதியம் 12 வரையில்


நிகழ்ச்சித் தலைப்பு : தேடல் 2016

தேதி : 16 ஏப்ரல் 2016 (சனிக்கிழமை)

நேரம் : காலை 8 முதல் மதியம் 12 வரையில் 
 
இடம் : சிங்கைத் தமிழ்ச் சங்கம், 2, கம்போங் கபூர் சாலை

நிகழ்ச்சி ஏற்பாடு : சிங்கைத் தமிழ்ச் சங்கம் 

கட்டணம் & முன்பதிவு : கட்டணம் இல்லை - முன்பதிவு கட்டாயம் 

தொடர்புக்கு : திரு.வை.கிருஷ்ணசாமி   - tamilsangamtamil@gmail.com 

நிகழ்ச்சி விளக்கம் :
"கைபேசியைத் தொடு, சவாலைத் தேடு' என்ற முழக்கவரியோடு, இளையர்களுக்கான இந்த நிகழ்ச்சி இரண்டாம் ஆண்டாக வெற்றி நடை போட வருகின்றது. 

'தேடல் 2016', தமிழ்மொழி பயிலும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குப் பள்ளிக்கும் அப்பாலும் தமிழைப் பயன்படுத்தி, தமிழில் உரையாட வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குழுவாகப் பிரிக்கப்படவிருகின்ற மாணவர்களிடையே குழு உணர்வு, தலைமைத்துவப் பண்பு மற்றும் மொழியைச் சரிவரக் கையாளும் தன்மை ஆகியவற்றை வளர்க்கும் ஒரு நிகழ்ச்சியாக இது அமையும். மேலும் இந்தத் தேடல் நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் தங்களுடைய கலாசாரம், பண்பாடு மற்றும் மரபு சார்ந்த விஷயங்களைக் கண்டறிந்து, தங்களது மொழியின் மாண்பையும் கலாசாரத்தின் மாண்பையும் அறிவார்கள்.

 



Back To Top