09 April 2016
காலை 10 முதல் மதியம் 1வரையில்
நிகழ்ச்சித் தலைப்பு : வண்ணத்தமிழ் 2016
தேதி : 9 ஏப்ரல் 2016 (சனிக்கிழமை)
நேரம் : காலை 10 முதல் மதியம் 1வரையில்
இடம் : இந்திய மரபுடைமை நிலையம்
நிகழ்ச்சி ஏற்பாடு : உறுமி மின்னிதழ்
கட்டணம் & முன்பதிவு : கட்டணம் இல்லை.
தொடர்புக்கு : திரு.கல்யாண் குமார் - sgkalyans@gmail.com
நிகழ்ச்சி விளக்கம் :
பாலர் பள்ளி மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி. ( பாலர் பள்ளி மாணவர்கள் - K1 & K2 மாணவர்கள் மட்டுமே!)
இது ஒரு வண்ணம் தீட்டும் போட்டி. பாலர் பள்ளி மாணவர்கள் தமிழ் எழுத்துக்கள் மற்றும் அந்த எழுத்துக்கள் தொடர்பான படங்களுக்கும் வண்ணம் தீட்டுவர். இந்தப் போட்டியின் மூலம் மாணவர்களிடத்தில் இளம் வயதிலேயே தமிழ்மொழி மீதான ஆர்வத்தை உருவாக்குவதே நோக்கமாகும். இந்தப் போட்டிக்கான அடிப்படை உத்திமுறை சீன எழுத்துக்கலையான 'கேலிகிராஃபி'யின் தாக்கத்தால் உருவானது. பங்கேற்பாளர்கள் அவர்கள் விரும்பும் வண்ணம்தீட்டும் பொருட்களைக் கொண்டு வண்ணம் தீட்டி, மொழியின்மீது அவர்கள் கொண்டிருக்கும் வண்ணமயமான ஈடுபாட்டை வெளிப்படுத்தலாம்.