முன்னேற்றம் - மாணவர்களுக்கான தன்முனைப்புக் கருத்தரங்கம்

2016-TLF---TRC-Munnetram---Tamil-Forum-for-Students

09 April 2016
காலை 9 முதல் மதியம் 12 வரையில்


நிகழ்ச்சித் தலைப்பு : முன்னேற்றம் - மாணவர்களுக்கான தன்முனைப்புக் கருத்தரங்கம் 

தேதி : 9 ஏப்ரல் 2016 (சனிக்கிழமை)

நேரம் : காலை 9 முதல் மதியம் 12வரையில்
 
இடம் : MDIS உள்ளரங்கம், ஸ்டர்லிங் சாலை.

நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழர் பேரவை 

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை 

தொடர்புக்கு : திரு.வி.பாண்டியன் - pandiyan@singnet.com.sg

நிகழ்ச்சி விளக்கம் :
மாணவர்களுக்காகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தன்முனைப்புக் கருத்தரங்கம். கல்வியிலும் வாழ்க்கையிலும் சிறந்திட வழிகாட்டிக் குறிப்புகளோடு முன்மாதிரிகளின் பகிர்வுகள் கொண்ட கருத்தரங்கம்.

இந்தக் கருத்தரங்கத்தின் மூலம் மாணவர்கள் அவர்களது இலட்சியங்களையும் கனவுகளையும் அடைய முடியும் என்ற தன்னம்பிக்கையை அவர்களிடத்தில் ஏற்படுத்துதல் முக்கிய நோக்கமாகும். சாதாரணக் குடும்பச் சூழ்நிலையிலிருந்து வந்து, வாழ்க்கையில் வெற்றி பெற்ற முன்மாதிரிகளின் பகிர்வுகள் நடைபெறும். இதன்மூலம் இம்மாணவர்கள் வாழ்க்கையைத் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் கையாள இயலும் என்ற மனவுறுதியை ஏற்படுத்துவதும் இக்கருத்தரங்கத்தின் நோக்கமாகும். இதைத் தவிர்த்து, மாணவர்களுக்கு எவ்வாறு நேரக் கட்டுப்பாடு மற்றும் நேர நிர்வாகம் செய்தல் என்ற உத்திமுறைகள் கற்பிக்கப்படும். எதிர்காலத் தேவைகளுக்கு எவ்வாறு மாணவர்கள் தயாராக இருக்கவேண்டும் என்பதும் இக்கருத்தரங்கில் பகிர்ந்துகொள்ளப்படும். இறுதியாகவும் முக்கியமாகவும் மாணவர்கள், பேச்சாளர்கள் மற்றும் முன்மாதிரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட வாய்ப்பு அளிக்கப்படும்.

 



Back To Top